செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் வீடுகளை முற்றுகையிடுவோம்! : பொதுமக்கள்

12:18 PM Nov 12, 2024 IST | Murugesan M

மதுரை மாநகர் பி.பி.குளம் கண்மாயை ஒட்டிய முல்லைநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தில் மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

Advertisement

முல்லைநகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன், எம்.எல்.ஏ., எம்.பி-க்களின் வாக்குறுதியை நம்பி பட்டா வழங்குவார்கள் என முல்லைநகர் பகுதி மக்கள் காத்திருந்ததாக தெரிவித்தார். ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் வீடுகளை முற்றுகையிடுவோம் எனவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
If we don't fulfill our promisesMAINwe will besiege the houses of MPs and MLAs! : Public
Advertisement
Next Article