வார விடுமுறை - குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!
விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தென்காசியின் முக்கிய சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
விடுமுறையையொட்டி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ள், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீராடினர். குற்றாலத்தில் மக்கள் கூட்டம் களைகட்டியதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் வார விடுமுறையையொட்டி காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் திரளான ஐயப்ப பக்தர்களும் அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர்.