விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்குப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் லியா லட்சுமி என்ற சிறுமி யூகேஜி படித்து வந்தார். இடைவேளையின்போது வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு வராததால், ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். அப்போது சிறுமி பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை நிறைவு பெற்று குழந்தையின் உடல் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இந்நிலையில் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பொன்முடி, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது 3 லட்சம் ரூபாய்க்கான நிவாரணத்தை அமைச்சர் பொன்முடி வழங்க முன்வந்த நிலையில், உறவினர்கள் அதை வாங்க மறுத்தனர்.