For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விசிகவிற்கும் தவெகவிற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை...! : திருமாவளவன்

03:19 PM Dec 09, 2024 IST | Murugesan M
விசிகவிற்கும் தவெகவிற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை       திருமாவளவன்

தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது என  தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கபட்ட மக்களுக்காக வி.சி.க சார்பில் நிவாரண நிதியை வழங்கினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன்,

விடுதலை சிறுத்தைகள் துணை பொது செயலாளர் ஆதவ அர்ஜுன் சமீப காலமாக பல்வேறு நிகழ்வுகளில் சமூகம் ஊடகங்களில் தங்களது கருத்துகளை வெளியிட்டதன் மூலம் கட்சியின் நம்பகத்தண்மை பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

Advertisement

அது தொடர்பாக அவரிடம் பல முறை அறிவுரை செய்தோம், ஆனாலும் அவருடைய பேச்சு நம்பகத்தன்மைக்கு எதிராக அமைந்திருந்த சூழலினால், கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி ஆறு மாத காலத்திற்கு ஆதவ அர்ஜூனை இடைநீக்கம் செய்துள்ளோம்.

பலமுறை ஆதவர் அர்ஜுனா அவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தாலும் இந்த முறை எந்த விதமான விளக்கம் கேட்காமல் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த அவர்,

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாது எனக் கூறியது சுதந்திரமான ஒரு முடிவு, தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த விதமான பிரச்சனை கிடையாது.

எங்களது வளர்ச்சி பிடிக்காதவர் எங்களை வீழ்த்த வேண்டும் எனவும் எங்களுடன் இருப்பவர்கள் எங்களுக்கு எதிராக கதை கட்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என உள்ளுணர்ந்து தான் விகடன் பதிபகத்திர்க்கு விஜய் வைத்து நூல் வெளியிடலாம் என கூறியிருந்தோம்.

நூல் வெளியீட்டுக்கு முன்பாக என்னை சந்தித்தபோது அவரிடம் நூல் தொடர்பான பேச்சு மற்றும் அம்பேத்கர் தொடர்பாக பேச வேண்டும் என கட்சியின் பொறுப்பாளராக கூறி இருந்தேன், ஆனால் அதை எதிர்த்து உண்மையாக அனைவரும் தேசிய அரசியல் தொடர்பாக பேசி உள்ளார், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை இடைநீக்கம் செய்துள்ளோம் என தெவித்தார்.

Advertisement
Tags :
Advertisement