விஜயதசமி கொண்டாட்டம் - கோவை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் விழா!
07:30 PM Oct 12, 2024 IST | Murugesan M
விஜயதசமியை முன்னிட்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் விழா நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று அம்மனை அழைப்பது வழக்கம், அதன்படி விரதமிருந்த பக்தர்கள் அம்மனை வேண்டி கத்திபோடும் விழாவை நடத்தினர். இதில் பக்தர்கள் கூர்மையான கத்திகளை கொண்டு தனக்கு தானே உடலில் வெட்டிக் கொண்டனர்.
Advertisement
ரத்தம் வழியும் நிலையிலும் அம்மனை வேண்டி கோஷமிட்டபடி பக்தர்கள் உற்சாக நடனமாடினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஊர்வலமாக நடனமாடினர். பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த விழாவின் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, சவுடாம்பிகை அம்மன் கோயிலை வந்தடைந்தது.
Advertisement
Advertisement