விஜய் திவாஸ் தினம்! : தேசிய போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை!
11:16 AM Dec 16, 2024 IST | Murugesan M
விஜய் திவாஸ் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போரின் வெற்றி வங்கதேசம் என்ற புதிய தேசத்தின் பிறப்புக்கு காரணமாக அமைந்தது. இதனையடுத்து, இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் தைரியத்தை குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் என்ற பெயரில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
Advertisement
அதன்படி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement