விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!
12:21 PM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
புதுச்சேரியில் விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
Advertisement
விடுமுறை தினங்களிலும் மாணவர்களுக்கு ஓய்வு அளிக்காமல் தொடர்ந்து பாடம் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதன்பேரில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
ஆகவே, விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement