For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் பலி!

12:53 PM Jan 04, 2025 IST | Murugesan M
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து   6 பேர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில், 80 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

இந்த பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில், 4 அறைகள் தரைமட்டமானது. அப்போது பணியில் இருந்த வேல்முருகன், நாகராஜ், காமராஜ், மீனாட்சிசுந்தரம், சிவகுமார் மற்றும் கண்ணன் ஆகிய 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று , மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன் மற்றும் மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

அதில், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்தியது மற்றும் பாதுகாப்பு இன்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement