விளிம்புநிலை மக்களின் மேம்பாடுதான் முக்கியம்! - அமித் ஷா
இந்தியா பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே வேளையில், விளிம்புநிலை மக்களின் மேம்பாடும் முக்கியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய கூட்டமைப்பின் வைர விழாவில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்படுவதாக தெரிவித்தார்.
அதே வேளையில், 140 கோடி இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக கூறிய அவர், தேசம் வளர்ந்து, பொதுமக்கள் பின்னடைவை சந்திக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக விளிம்புநிலை மக்களின் மேம்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தது என மத்திய அமைச்சர் அமித் ஷா அப்போது தெரிவித்தார்.