விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்பை ஆய்வு சென்ற அமைச்சர் பொன்முடி - சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய கிராம மக்கள்!
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டுப் பகுதியில் அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர்.
ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி விழுப்புரம் மாவட்டம் அரசூர் இருவேல்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இருவேல்பட்டு விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருபுறமும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
அப்போது அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்து பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சேற்றை வாரி பொன்முடி உள்ளிட்டோர் மீது வீசினர். இதனையடுத்து அவர் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.