விவசாயப் பெருமக்களுக்கு என்றும் மகிழ்வும், ஆரோக்கியமும் கிடைக்கட்டும் : எல். முருகன் உழவர் திருநாள் வாழ்த்து!
11:59 AM Jan 16, 2025 IST | Murugesan M
மனித இனம் வாழ, அயராது உழைத்து உயிரூட்டி வரும், விவசாயப் பெருமக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உழவர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
Advertisement
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து’ என்ற அய்யன் வள்ளுவனின் வாக்குப்படி, உலக உயிர்கள் அனைத்திற்கும் உழுது உணவளித்து மனித இனம் வாழ அச்சாணியாக அயராது உழைத்து உயிரூட்டி வரும், விவசாயப் பெருமக்களுக்கு என்றும் மகிழ்வும், உழைக்க ஆரோக்கியமும் கிடைத்திட வேண்டுகிறேன்.
உழவர் தினம் கொண்டாடும் விவசாயிகள் அனைவருக்கும், எனது உழவர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்
Advertisement
Advertisement