விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடுவே காரணம் - அண்ணாமலை புகழாரம்!
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நாராயணசாமி நாயுடு காரணமாக இருந்தார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "தனது வாழ்நாள் முழுவதும் விவசாய நலனுக்காகவும், விவசாயிகள் நல்வாழ்வுக்கும் வாழ்ந்த நாராயணசாமி நாயுடு நினைவு தினம் இன்று. தமிழக விவசாயிகள் சங்கத்தை நிறுவி, விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடியவர்.
விவசாயிகளுக்கு இன்று இலவச மின்சாரம் கிடைப்பதற்குக் காரணமானவர். 1950களில், விவசாயத்துக்காக வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டபோதும், 1970களில், திமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோதும், விவசாயிகளைத் திரட்டி, போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். ஐயா நாராயணசாமி நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.