விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிப்பு - மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தமிழக விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர்.
கோவை இருகூரிலிருந்து சூலூர் வழியாக முத்தூர் வரை, விவசாய நிலங்களில் செல்லும் எரிவாயுக் குழாய் பதிப்பால், நிலங்கள் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் இன்று, டெல்லியில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை
சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.
பின்னர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) அதிகாரிகளுடன் நடைபெற்ற முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலை வழியாக, மாற்றுப்பாதையில் குழாய்களைக் கொண்டு செல்வதற்கான வரைபடத்தை, விவசாயிகள், அதிகாரிகளிடம் வழங்கினர்.
விவசாயிகள் கொடுத்த மாற்றுப்பாதையைப் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இந்தக் குழுவில் தமிழக பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் gk.நாகராஜ் உழவர் உழைப்பாளி கட்சித் தலைவர், சொல்லேர் உழவன் செல்லமுத்து மற்றும் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.