செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வீட்டுக்காவலில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் - அண்ணாமலை கண்டனம்!

10:43 AM Jan 03, 2025 IST | Murugesan M

மதுரையில் நீதி கேட்பு பேரணியில் ஈடுபட திட்டமிட்டிருந்த பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி, தமிழக பாஜக
மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு.

திமுக ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் தமிழக பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின்அவர்களே? திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா?" என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

Advertisement
Tags :
Anna UniversityAnna University campusannamalai condemnschennai policeDMKFEATUREDGnanasekaran arrestmadurai bjp demoMAINouse arreststudent sexual assaulttamilnadu bjp presidenttamilnadu government
Advertisement
Next Article