வெகு விமரிசையாக நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம்!
02:12 PM Jan 20, 2025 IST | Murugesan M
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வாக நம்மாழ்வார் மோட்சம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 30-ந்தேதி விமரிசையாக தொடங்கியது.
Advertisement
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 10-ந் தேதி நடைபெற்ற நிலையில், உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது.
ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இறுதி நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Advertisement
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா, ரங்கா என கோஷங்கள் எழுப்பி பெருமாளை தரிசனம் செய்தனர்.
Advertisement