வெறி நாய் கடித்ததில் 4 வயது சிறுவன் படுகாயம்!
03:39 PM Dec 04, 2024 IST
|
Murugesan M
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தெரு நாய் கடித்ததில் 4 வயது சிறுவன் காயமடைந்தார்.
Advertisement
பெரியகடை பகுதியில் வசித்துவரும் சுக்கூர் என்பவரது 4 வயது மகன் அப்ரான், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த தெரு நாய், சிறுவனின் முகத்தில் பாய்ந்து வந்து கடித்தது.
இதைக்கண்ட சிறுவனின் உறவினர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சிறுவனை தெரு நாய் கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article