For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60!

10:05 AM Dec 31, 2024 IST | Murugesan M
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 60

இரண்டு விண்கலன்களுடன் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

நாட்டின் எதிா்கால விண்வெளி தேவையைக் கருத்தில் கொண்டு, பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Advertisement

இதன் ஒருபகுதியாக ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியாா் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்தது.

தலா 220 கிலோ எடை கொண்ட இந்த இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இரவு 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டன. புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விண்கலன்கள் புவியிலிருந்து 476 கிலோமீட்டர் தொலைவு கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

Advertisement

பிஎஸ்எல்வி சி-60 வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement
Tags :
Advertisement