வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் : தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன? - அண்ணாமலை விளக்கம்!
சென்னையைத் தாண்டி ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கத் தவற விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "முதல்வரும், துணை முதல்வரும் "குறைவான மழை பெய்த சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். ஆனால் சென்னையைத் தாண்டி நடக்கும் வெள்ள பாதிப்பு நிகழ்வுகளை அவர்கள் கண்காணிக்கத் தவறவிட்டனர்.
தி.மு.க.வின் ஊடகப் பிரிவாக DIPR செய்ல்படுகிறது. கடுமையான வெள்ள பாதிப்புகளை மறைத்து உண்மைகளை மக்களிடம் இருந்து திசைதிருப்ப முயல்கிறது. கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளது, இது அரசின் அலட்சியத்தின் தெளிவான அறிகுறியாகும்.
இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்களின் கோபம் வெளிப்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்காக இது ஒரு மென்மையான நினைவூட்டல் என்றும் இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை" என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.