வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலைய இணைப்பு சாலை - வர்த்தக சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு!
07:30 PM Dec 10, 2024 IST | Murugesan M
வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலைய இணைப்பு சாலையை வர்த்தக சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையானது, பல ஆண்டாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சாலை, சென்னை மாநகராட்சி வசம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில், இந்த சாலையை வர்த்தக சாலையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒரு ஆலோசகரையும் மாநகராட்சி நியமித்துள்ளது.
இந்த திட்டத்துக்கான பணிகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் தொடங்கவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement