வைகுண்ட ஏகாதசி - பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஶ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் திருக்கோயிலில் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு விழா அதிகாலை 5 மணிக்கு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில், அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, பெருமாள் மற்றும் தாயாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும், மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பெருமாள் மற்றும் தாயார் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.