செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக மதுரை செல்லும் “டிராமா மாடல்” அரசின் முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை விமர்சனம்!

11:08 AM Jan 26, 2025 IST | Sivasubramanian P

ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக  முதல்வர் ஸ்டாலின மதுரை செல்வதாக தமிழப பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற ஸ்டாலின் , ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது,பாரதப் பிரதமர் மோடி  விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
annamalaidrama model governmentMadurai tungsten mine issueMAINMK Stalinstalin madurai visittamilnadu bjp president
Advertisement
Next Article