செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

3 மீட்டர் தூரத்துக்கு நகர்த்தப்பட்ட ஸ்பேடெக்ஸ்! - இஸ்ரோ

09:49 AM Jan 12, 2025 IST | Murugesan M

ஸ்பேடெக்ஸ் திட்​டத்​தின்​கீழ் விண்​வெளி​யில் விண்கலன்களை ஒருங்​கிணைக்​கும் சோதனை முயற்சி நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Advertisement

இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்ரோ, பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிலை​யத்தை 2035-ம் ஆண்டுக்​குள் விண்​ணில் நிறுவ முடிவு செய்​துள்ளது.

அதற்கு முன்னோட்​டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்​டத்​தின்​கீழ் விண்​வெளி​யில் விண்​கலன்களை ஒருங்​கிணைக்​கும் பரிசோதனையை மேற்​கொள்ள இஸ்ரோ முடிவு செய்​தது.

Advertisement

இதற்காக வடிவ​மைக்​கப்​பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய விண்​கலன்​கள் பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் மூலமாக ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்​ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்​தப்​பட்டன.

இவற்றின் தூரத்தை 225 மீட்​டராக குறைக்க முயற்சிக்​கப்​பட்​ட நிலையில், விண்​கலன்​களின் இயக்​கத்​தின் வேகம் எதிர்​பார்த்​ததைவிட குறைந்​ததால் விண்​கலன்கள் ஒருங்​கிணைப்பு நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்​கப்​பட்​டது.

இந்நிலையில்விண்கலன்களை 15 மீட்டர் தூரத்துக்கு நகர்த்தும் சோதனை முயற்சியில், 3 மீட்டர் தூரத்துக்கு விண்கலன்கள் நகர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலன்கள் மீண்டும் பாதுகாப்பான தூரத்துக்கு நகரத்தப்படுவதாகவும், தரவுகளை ஆய்வு செய்த பிறகு விண்கலன்களை இணைக்கும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
#isro start new mission spadexFEATUREDISROisro launches spadex missionisro spadexisro spadex dockingisro spadex missionisro's spadex mission 2024latest newsMAINSpaceXspadeexSPADEXspadex deployspadex isrospadex isro missionspadex launchspadex missionspadex mission by isrospadex mission isrospadex mission kya haispadex mission launchspadex postponedspadex satellitespaidex missionwhat is spadex mission?
Advertisement
Next Article