ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சாமி கோயிலில் தேங்கிய மழை நீர் - பக்தர்கள் அவதி!
08:30 PM Dec 18, 2024 IST | Murugesan M
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சாமி கோயிலில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மடவார் வளாகம் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கோயிலின் உட்பகுதியில் மழைநீர் தேங்கியது.
Advertisement
இதனால் சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மழை நீர் உட்புகுவதை தடுக்க இந்து சமய அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement