ஹெச்.ராஜா எழுதியது போல் போலி கடிதம் - சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஹெச்.ராஜா எழுதியது போல் போலி கடிதம் வெளியான விவகாரம் குறித்து விசாரிக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கையெழுத்திட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. பாஜக தேசிய தலைமையைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், பல்வேறு நிறுவனங்களை மிரட்டி அண்ணாமலை பணம் பறிப்பதாகவும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்தக் கடிதம் போலியானது என ஹெச்.ராஜா விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், போலி கடிதம் தயாரித்து அவதூறு பரப்ப முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக ஐடிவிங் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேட்டியளித்த ஐடிவிங் தலைவர் கார்த்திக் கோபிநாத், ஜல்லிக்கட்டு சாதி பாகுபாடு, பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற பிரச்னைகளை திசை திருப்ப அண்ணாமலை குறித்து அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார்....