10,000 ரயில்களில் கவாச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், சிறப்பான ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழங்கி வருகிறது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அம்ரி பாரத் ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்ரி பாரத் 2.0 திட்டத்தில் 12 முக்கிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும், குறிப்பாக, ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பு வசதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் 10 ஆயிரம் ரயில் எஞ்ஜின்களில் கவாச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது எனவும், பாம்பன் புதிய ரயில் பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் தெரிவித்தார். அத்துடன், ரயில் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை தமிழக முதல்வர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.