For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2-வது பசுமை புரட்சி : இந்திய வேளாண் துறையில் AI தொழில்நுட்பம் - சிறப்பு கட்டுரை!

09:05 AM Dec 17, 2024 IST | Murugesan M
2 வது பசுமை புரட்சி   இந்திய வேளாண் துறையில் ai தொழில்நுட்பம்   சிறப்பு கட்டுரை

இந்தியாவின் பசுமை புரட்சியாக விவசாய உற்பத்தியில் புதியதொரு வரலாற்றைப் படைக்கும் இந்திய விவசாயிகளுக்கு AI போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு....

2015 ஆம் ஆண்டு, இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, அது கிழக்கு இந்தியாவில் இருந்து உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அறிவித்தார்.

Advertisement

மேலும்,இந்திய விவசாயம் உள்ளீடுகள், நீர்ப்பாசனம், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தை இணைப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் பின்தங்கியிருப்பதாகவும், இந்தத் துறைகளை நவீனமயமாக்கி அதிக உற்பத்தி செய்ய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உற்பத்தித்திறனை அதிகரிக்க வேளாண்மைக்கு அறிவியல் முறைகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, ஒரு துளிக்கு, அதிகப் பயிர் என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

Advertisement

மண்ணின் ஆரோக்கியம் மற்றும் விதைகள், நீரின் அளவு, உரமிடும் அளவு போன்றவற்றின் அடிப்படையில் அதன் தேவைகளை நிர்ணயிக்க விவசாயத் துறையில் செயற்கை நுண்ணறிவின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் தலைமையில், இந்திய விவசாயத்தின் நிலையான வளர்ச்சி மற்றும் உணவு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை எட்டி உள்ளது.

தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில், இந்திய விவசாயத்தை AI விவசாய மையமாக மத்திய அரசு மாற்றியது. 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் டிஜிட்டல் விவசாய திட்டங்களைச் செயல்படுத்தியது.

இதற்கிடையே, பரவலான 4G கவரேஜ் உள்ளதால், கிராமப்புற விவசாயிகள் கூட AI- கருவிகளை எளிதில் பயன்படுத்த முடிகிறது.

இந்திய விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.

இந்தியாவில், விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு மற்ற துறைகளை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் AI செலவுகளைக் குறைக்கிறது , தரத்தை மேம்படுத்துகிறது, உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது மற்றும் நாட்டை வளப்படுத்துகிறது.

சென்சார்கள், ட்ரோன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி மற்றும் பூச்சிகளின் தாக்குதல் பற்றிய நிகழ்கால தரவுகள் என பல விஷயங்களை விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து கொள்கிறார்கள்.

மேலும், நடவு அட்டவணைகள், நீர்ப்பாசன முறைகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உத்திகள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்கிறார்கள். சூழ்நிலைக்கேற்ற வேளாண் முடிவுகளை எடுக்கவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு AI தொழில்நுட்பங்ள் பெரிதும் உதவி செய்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த CropIn என்ற நிறுவனம், மண்ணின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் மற்றும் பொதுவாக மண்ணின் குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் குறிப்பிட்ட பயிரைக் குறிப்பிடுதல் போன்ற பணிகளை செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாகியுள்ளது.

மேலும், விவசாயத்தின் பல்வேறு நிலைகளில் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பற்றிய குறிப்புகளை CropIn வழங்கிறது . பயிர் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கண்காணிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதோடு, பூச்சிகள் அல்லது நோய்கள் குறித்த எச்சரிக்கைகளையும் வழங்குகிறது.

AI மூலம் 82 பில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமித்ததாகவும், அதன் செயல்பாட்டுப் பகுதியில் 54,000 டன்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்ததாகவும் Fasal என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிய விவசாயிகளுக்கு பாரம்பரிய செலவுகளின் ஒரு பகுதியிலேயே புதிய நடைமுறைகளைப் பின்பற்ற உதவும் வகையில் டிஜிட்டல் கிரீன் போன்ற நிறுவனங்கள் மாற்று தீர்வுகளை ஆராய்ந்து வருகின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த இன்டெல்லோ லேப்ஸ் என்ற நிறுவனம், முகங்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் பிற பொருட்களை அடையாளம் காண AI யைப் பயன்படுத்துகிறது. ஒரு புகைப்படத்தை கிளிக் செய்வதன் மூலம் பயிரின் ஆரோக்கியத்தை விவசாயி அறிந்து கொள்ள முடியும். விவசாயிக்கு என்ன செய்ய வேண்டும் என்று என்பதையும் AI சொல்லும். புகைப்படத்தைப் பயன்படுத்தி அறுவடை செய்யப்பட்ட பொருட்களின் தரத்தையும் தொழில்நுட்பம் அடையாளம் காண முடியும். இந்தியாவின் முன்னணி விவசாய ரோபாட்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல்லோ, பூச்சி தொற்று பற்றிய எச்சரிக்கைகளையும் வழங்க முடியும் என்று கூறுகிறது.

விவசாயிகள் தரப்பில் அதிக முதலீடு இல்லாமல் விதைகளை விதைக்க சரியான நேரத்தை பரிந்துரைக்க மைக்ரோசாப்ட் இந்தியா தன் செயற்கை நுண்ணறிவை இந்திய விவசாயிகளுக்கு வழங்குகிறது.

லக்னோவைச் சேர்ந்த கோபாஸ்கோ, என்ற நிறுவனம் விவசாயிகளுக்கும் வாங்குபவர்களுக்கும் சிறந்த விலையை வழங்கும் விவசாயத்திற்கான தரவு சார்ந்த ஆன்லைன் சந்தையை வழங்குதல் உதவியைச் செய்கிறது.

விவசாயத்தில் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சனை என்பது சரியான பயிர் சுழற்சியைக் கண்டறிவதாகும் . சிறந்த பயிர் சுழற்சிகளைக் கண்டறிய, இந்தூரைச் சேர்ந்த கிராமபோன் என்ற நிறுவனம் விவசாயிகளுக்கான AI யை உருவாக்கி உள்ளது.

விவசாயிகள் மண்ணைத் தயார் செய்யவும், சரியான பயிரை தேர்வு செய்யவும், சரியான நேரத்தில் நிலத்தை உழவு செய்யவும், பூச்சிக்கொல்லிகளுக்கான நேரம் மற்றும் மருந்தளவு பரிந்துரைகளைப் பெற இந்திய அரசு IBM உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், இந்திய விவசாயம் மகத்தான வெற்றியைப் பெறப் போகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதன் வழியே இந்தியா விவசாயத்துறையில் தன்னிறைவைப் பெறும். எதிர்கால சந்ததியின் உணவுத் தேவைகளையும், உணவு தேவைகளுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Advertisement
Tags :
Advertisement