2024-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த மக்கள்!
ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில், கருநீலக் கடலுக்கும், இளநீல வானுக்கும் இடையே செங்கனிபோல் சூரியன் கதிர்களை விரித்து உதயமான காட்சியை, நடை பயிற்சிக்கு வந்தவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

மதுரை மாநகரிலும் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை வீடுகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர்.
அதேபோல, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள பக்காலி கடற்கரையில், செங்கதிர்கள் சூழ வெண் மேகங்களுக்கிடையே உதயமான சூரியனை ஏராளமான மக்கள் காத்திருந்து கண்டு ரசித்தனர்.