2025-ஆம் ஆண்டு DMK FILES 3 வெளியிடப்படும் - அண்ணாமலை தகவல்!
09:31 AM Dec 18, 2024 IST | Murugesan M
2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் DMK FILES THREE வெளியிடப்படும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர், திராவிட கட்சி இல்லாத ஆட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அமையும் என தெரிவித்தார்.
Advertisement
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அரசியல் கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும், நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்கவே ஒரே நேரத்தில் ஒரே தேர்தல் திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தலின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
Advertisement
Advertisement