2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் - அன்புமணி ராமதாஸ் உறுதி!
2026 -ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் எனவும், அதில் பாமக இடம் பெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
பேட்மிட்டன் விளையாட்டுக்கான கட்டுமானம் தமிழகத்தில் தேவை.
மற்ற மாநிலங்களில் பேட்மிட்டன் கோர்ட்டுகள் சிறப்பாக உள்ளது.
தமிழக அரசால் உருவாக்கப்பட்ட இண்டோர் ஸ்டேடியம் சிறப்பானதாக இல்லை.
சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் இண்டோர் ஸ்டேடியம் இல்லை.விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளது.
57 ஆண்டுகளாக திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர்.
சென்னையின் நிலைமையை எடுத்துக்காட்டாக பார்க்க வேண்டும்.
2026ல் கூட்டணி குறித்த கேள்விக்கு, 2026 ல் கூட்டணி ஆட்சி அமைக்கும்
அந்த கூட்டணியில் பாமக இருக்கும் என அன்புமணி தெரிவித்தார்.