25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் - களத்தில் 44 வேட்பாளர்கள்!
05:02 PM Dec 15, 2024 IST | Murugesan M
25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
Advertisement
இதில் ஆயிரத்து 502 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. 11 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், நீதிக்கான அணி, மாற்றத்துக்கான அணி, ஒற்றுமைக்கான அணி என 3 அணிகளாக பிரிந்து 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1371 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 91.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement