3 நாட்களுக்குப் பிறகு குறைந்த மழை - இயல்பு நிலைக்கு திரும்பிய நாகை!
12:30 PM Nov 29, 2024 IST | Murugesan M
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து வந்த நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நாகை மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் எதிரொலியாக, கடந்த 3 நாட்களாக நாகை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.
இதனால் நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர் தேங்கியது.
Advertisement
இதனால் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை முதல் தற்போது வரை நாகை மாவட்டத்தில் மழை பெய்யாததால் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதனால் பேருந்து நிலையம், கடைவீதிகள், வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Advertisement
Advertisement