செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

3-வது ஆட்சியில் 3 மடங்கு வேகத்துடன் மத்திய அரசு : குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்!

02:26 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மத்திய அரசு தனது 3-வது ஆட்சியில் மூன்று மடங்கு வேகத்துடன் செயல்பட்டு வருவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 3-வது ஆட்சியில் மூன்று மடங்கு வேகத்துடன் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்த குடியரசு தலைவர், விவசாயிகளின் நலனுக்கான மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து பேசிய குடியரசு தலைவர். இந்தியா விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருவதாகவும், மகளிர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் கூறினார். அதேபோல் செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement
Tags :
2025 parliment2025 parliment electionCentral Government with 3 times speed in 3rd regime: President Drabupati Murmu is proud!FEATUREDMAIN
Advertisement