31 ஏக்கர் நிலம் முறைகேடாக விற்பனை! - தனி நீதிபதி ஆணைக்கு இடைக்கால தடை
12:08 PM Nov 26, 2024 IST
|
Murugesan M
மதுரை தல்லாகுளம் பகுதியில் 31 ஏக்கர் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்தது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மதுரை–ராமநாதபுரம் மண்டல சி.எஸ்.ஐ. நிர்வாகம் தாக்கல் செய்த அவசர மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என சிபிஐ வாதம் முன் வைத்துள்ளது தொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்ய சி.எஸ்.ஐ. நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Advertisement
Advertisement
Next Article