33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த 6 வயது சிறுவன்!
07:30 PM Dec 24, 2024 IST | Murugesan M
கடலூரை சேர்ந்த 6 வயது சிறுவன் மூச்சுவிடாமல் 33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீச்சலடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கடலூரை சேர்ந்த விஜய் - அருணா தம்பதி செங்கல்பட்டு மாவட்டம் படூர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது 6 வயது மகன் ரக்ஷன், நீச்சல் மீது கொண்ட ஆர்வத்தால் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
Advertisement
இந்த நிலையில், இரண்டு கைகளையும் பின்புறம் கட்டிக்கொண்டு, நீச்சல் குளத்தில் மூச்சுவிடாமல் 33 நொடிகளில் 25 மீட்டர் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். சிறுவனின் இந்த சாதனை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ள நிலையில், சிறுவனுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement