5-17 வயதிற்கு உட்பட்டோரை தாக்கும் 'வாக்கிங் நிமோனியா'!
5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை வாக்கிங் நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்குவதாக இந்திய மருத்துவக்கழகம் எச்சரித்துள்ளளது.
தற்போது பனி மற்றும் குளிர்காலம் நிலவுவதால் வாக்கிங் நிமோனியா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதாகவும்,
5 முதல் 17 வயதினரிடையே வேகமாக பரவி சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவக்கழகம் தெரிவித்துள்ளது.
இருமல் மற்றும் தும்மல் மூலம் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மருத்துவக்கழகம் எச்சரித்துள்ளது.
இது நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் காய்ச்சல் என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் பனி மற்றும் குளிர்காலம் முடியும்போது இந்த காய்ச்சலின் தீவிரமும் குறைந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.