5, 8-ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி ரத்து! : மத்திய கல்வி அமைச்சகம்
05:43 PM Dec 23, 2024 IST | Murugesan M
பள்ளி மாணவர்களுக்கு 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி அவசியம் என்ற நடைமுறையை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புகளுக்கு செல்ல முடியும் என்ற நடைமுறை இருந்து வந்தது.
Advertisement
இந்நிலையில், இந்த நடைமுறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம்,
5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு 2 மாதங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் எனவும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை மேல் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Advertisement
துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படித்து தேர்ச்சி பெற வேண்டும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement