செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

50க்கும் மேலான ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்! - தமிழக அரசு உத்தரவு

10:36 AM Dec 30, 2024 IST | Murugesan M

தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதன்படி ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாக பதவி வகித்துவந்த வெங்கடராமனுக்கு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும், திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு டிஐஜி- ஆக பதவி உயர்வு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா புதுக்கோட்டை எஸ்.பி.யாகவும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
MAINMore than 50 IPS officers transferred! - Tamil Nadu Government Order
Advertisement
Next Article