59 வயதை எட்டும் போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு - சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!
சென்னை மாநகர போலீசில் 59 வயது நிரம்பியவர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வு பெற உள்ள 59 வயது நிரம்பிய காவலர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
காவலர்களின் வயது முப்பையும், நீண்ட கால பணி காலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து காவல் ஆளுநர்களுக்கும் இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் அருண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னறிவிப்பின் தொடர்ச்சியாக வரும் காலங்களில் 59 வயதை எட்டும் காவல் ஆளுநர்கள் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வு பெறும் நாள் வரை ஒரு வருட காலத்துக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையர் அருண் கூறியுள்ளார்.
சென்னை ஆணையரின் அறிவிப்புக்கு காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.