கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் - மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 35 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், திருப்பதி எம்.ஜி.எம். கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்துவிட்டதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என திருப்பதி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் பக்கத்தில், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், அவ்வப்போது அதிகாரிகளுடன் பேசி நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது.