For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

72 ஆடுகள், 1000 கிலோ இறைச்சி : கோயில் திருவிழாவில் 10,000 ஆண்களுக்கு கறி விருந்து!

10:51 AM Jan 04, 2025 IST | Murugesan M
72 ஆடுகள்  1000 கிலோ இறைச்சி   கோயில் திருவிழாவில் 10 000 ஆண்களுக்கு கறி விருந்து

மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

மதுரை திருமங்கலம் அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையாகோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா மார்கழி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்பார்கள்.

Advertisement

இத்திருவிழற்காக கோவிலை சுற்றியுள்ள உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பு நிற கிடாய்களை நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கோவிலில் கிடாய் வெட்டப்பட்டு திருவிழா தொடங்கியது.

4000 கிலோ அரிசி, 72 கிடாய்கள் வெட்டப்பட்டு 1000 கிலோ கறி சமைத்து கறி விருந்து படையல் செய்யப்பட்டு அதை ஆண்கள் மட்டும்  சாப்பிட உள்ளனர். இதற்காக கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர் .

Advertisement

கறி விருந்து முடிந்தவுடன் இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்தபின்னர் ஒரு வாரம் கழித்து பெண்கள் அந்த பகுதிக்கு சாமி கும்பிட வருவார்கள்.

Advertisement
Tags :
Advertisement