செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

76-ஆவது குடியரசு தினம் - 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

09:44 AM Jan 26, 2025 IST | Sivasubramanian P

நாட்டின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆண்டுதோறும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் நாட்டின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மதுரையை சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கும், புதுச்சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹரியானவை சேர்ந்த வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங், டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் நீரஜா பட்லா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

மேலும், போஜ்பூரைச் சேர்ந்த சமூக சேவகர் பீம் சிங் பவேஷ், நாகலாந்தை சேர்ந்த பழ விவசாயி ஹாங்திங்கிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஹரிமான் சர்மா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஜும்டே யோம்காம் காம்லின்,

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜோய்னாசரண் பதரி, சிக்கிம் மாநிலத்தைண் சேர்ந்த நரேன் குருங் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த விலாஸ் டாங்ரே, பீகாரைச் சேர்ந்த நிர்மலா தேவி மற்றும் பீம் சிங் பாவேஷ் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதா பஹின் பட், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் சோனி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாண்டி ராம் மண்டவி, மத்தியப்ப் பிரதேசத்தை சேர்ந்த ஜகதீஷ் ஜோஷிலா, குவைத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஷெய்கா அல் சபா உள்ளிட்ட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

Advertisement
Tags :
2025 padma awardsASWHINMAINpadma awardpadma award 2025Padma Awardspadma awards 2025padma awards 2025 announcedpadma awards 2025 announcementpadma awards 2025 winnerspadma awards 2025 winners listpadma awards winnerspadma awards winners 2025padma bhushan awardspadma shri awardpadma shri awardspadma vibhushan awards
Advertisement
Next Article