76-வது குடியரசு தினம் : டெல்லி கடமைப் பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் திரௌபதி முர்மு!
குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
Advertisement
நாட்டின் 76வது குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக டெல்லி ராஷ்டிரபதி பவனில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடமைப் பாதைக்கு புறப்பட்டார். நடப்பாண்டு குடியரசு தின விழாவில் இந்தோனோசிய அதிபர் சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள நிலையில், குடியரசுத் தலைவருடன் அவரும் புறப்பட்டார். இருவரும் பராம்பரிய முறைப்படி குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அழைத்து செல்லப்பட்டனர்.
இதனை அடுத்து, வீரர்கள் புடைசூழ கடமை பாதை வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனோசிய அதிபர் சுபியாண்டோ ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்