NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும் இனி NIA விசாரிக்கலாம்! : உச்சநீதிமன்றம்
NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும், இனி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அங்குஷ் லிபன் கபூருக்கு வழங்கப்பட்ட ஜாமினை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் நாகரத்னா, கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, போதைப்பொருள் கடத்தில் அதிக அளவு நடைபெறுவதாக வருத்தம் தெரிவித்த நீதிபதிகள் NIA துறைக்கு கூடுதல் அதிகாரம் அளித்து உத்தரவிட்டனர்.
அதன்படி, NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும், இனி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்குஷ் லிபன் கபூருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்த பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.