வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம்!
06:57 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 13 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பயணித்த படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement
இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கைதான 13 மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக அண்ணாமலை தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Next Article